கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில்  நாளை 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9  மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு கொழும்பு, கோட்டை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கடுவல , பொரலஸ்கமுவ, கொலன்னாவ , கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை, சொய்ஸாபுர ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.