12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் ஆட்டத்தில் இன்றைய தினம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணியும் மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத் ரஜீவ்காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

ஐதராபாத் அணி கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 181 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும் கொல்கத்தா அணி வீரர் ரஸலில் அதிரடி காரணமாக ஐதராபாத் தோல்வியைத் தழுவியது.

அத்துடன் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆட்டத்தை தவிர்த்த கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமுணையில் துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய அணியான ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 14 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. 

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் (69 ரன்) ‘மன்கட்’ முறையில் ரன்–அவுட் செய்யப்பட்டமை அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் அதை ஒதுக்கிவிட்டு வெற்றி வேட்டைய தொடங்கும் நோக்குடன் ராஜஸ்தான் இன்று களமிங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும், ஐதராபாத் அணி 5 போட்டிகளிலும் பெற்றிபெற்றுள்ளன.

ஐதராபாத் அணி காந்தி மைதானத்தில் இதுவரை 11 போட்டிளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது. 

அதேபோன்று ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்