கொழும்பு குப்பைகளுக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

Published By: R. Kalaichelvan

29 Mar, 2019 | 01:49 PM
image

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ளது.

பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட வண்ணாத்தவில்லு பிரதேச சபையில், நேற்றைய சபை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,

 எந்த சந்தர்ப்பத்திலும் குப்பைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியது என ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 

இதனையடுத்து, குப்பைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் திறந்த வாக்களிப்பு இடம்பெற்றது. 

இந்த வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 6 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நால்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு 1 உறுப்பினர்கள் தலா ஒவ்வொரும் என 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த வாக்களிப்பில் நான்கு உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51