வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் வீடு புகுந்து எரிவாயு கொள்கலனை (காஸ் சிலிண்டர்) திருடிய இருவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் இல்லாத சமயம் வீட்டின் கதவினை உடைத்து, உட்புகுந்த இருவர் வீட்டினுள் இருந்த  எரிவாயு கொள்கலனை திருடி சென்று இருந்தனர். 

வீட்டு உரிமையாளர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதானித்து உள்ளே சென்று பார்த்த போது எரிவாயு கொள்கலன் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் இருவரை கைது செய்தனர். 

கைது செய்யபப்ட்ட இருவரையும் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , இருவரையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.