முன்­னணி நிதித்­துறை சஞ்­சிகை கொமர்ஷல் வங்­கியை 17ஆவது தட­வை­யா­கவும் இலங்­கையின் தலை­சி­றந்த வங்கியாகத் தெரிவு செய்­துள்­ளது. இதன் மூலம் இலங்­கையின் வங்கித் துறையில் தனது தலை­மைத்­து­வத்தை வங்கி மீண்டும் உறுதி செய்­துள்­ளது.

ஆபி­ரிக்கா, ஆசியா பசுபிக், மத்­திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெ­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கு ஆகிய பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த உலகின் முன்­னணி வங்­கி­க­ளோடு சேர்த்து வளர்ச்சி கண்டு வரும் 25 வங்­கி­களின் பட்­டி­யலை தற்­போது வெளியிட்­டுள்­ளது.

சொத்­துக்­களின் வளர்ச்சி, இலா­பத்­தன்மை, மூலோ­பாய உற­வுகள், வாடிக்­கை­யாளர் சேவை, போட்டி விலை­யிடல், புத்­தாக்க உற்­பத்­திகள் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கியே இந்தத் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது. இவற்­றுக்கு மேல­தி­க­மாக இந்தத் தெரிவின் நம்­ப­கத்­தன்மை மற்றும் துல்­லியம் என்­ப­ன­வற்றை மேலும் அதி­க­ரிக்கும் வகையில் குளோபல் பினான்ஸ் கூட்­டாண்மை வாடிக்­கை­யாளர் மத்­தி­யி­லான வாக்­கெ­டுப்பும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

குளோபல் பினான்ஸ் தற்­போது நடத்தி முடித்­துள்ள இந்த மதிப்­பீட்டின் விரி­வான விவ­ரங்கள் 2016 மே மாதத்தில் வெளிய­டப்­ப­ட­வுள்­ளன. 2016 அக்­டோபர் 8ஆம் திகதி வாஷிங்­டனில் உள்ள நெஷனல் பிரஸ் கிளப்பில் இடம்­பெ­ற­வுள்ள உலக வங்கி ஃ சர்­வ­தேச நாணய நிதியம் என்­ப­ன­வற்றின் வரு­டாந்த பொதுக் கூட்­டத்தில் விருது வழங்கும் விழா இடம்­பெறும்.

கொமர்ஷல் வங்­கி­யோடு சேர்ந்து இவ்­வாண்டு ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்தில் ICIBC (சீனா), ஸ்டேட் பேங்க் ஒப் இந்­தியா(இந்­தியா), பேங்க் ரக்­கியாத் (இந்­தோ­னே­ஷியா), ஸ்ட்டேண்டர்ட் சார்டட் (பாகிஸ்தான்) மேய்பேங்க் (மலே­ஷியா), CTIBC பேங்க் (தாய்வான்), KEB ஹனா பேங்க் (தென் கொரியா), ஷியாம் கொமர்ஷல் பேங்க் (தாய்லாந்து) மற்றும் சிற்றி பேங்க் (பங்களாதேஷ்) என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.