குவாடமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் அருகே கூடிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லொறி புகுந்து மோதுண்டதில் 30 பேர் பலியாகியுள்ளதோடு. 17 பேர் படுகாயமுற்றனர்.

மத்திய அமெரிக்க நாடானா குவாடமாலாவில் அமைந்துள்ள நகுவாலா பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த லொறி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூடியருந்த பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளனது.

குறித்த  நகராட்சி அலுவலகம் அருகே லொறியில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 30 பேர் பலியான நிலையில்  17 பேர் படுகாயமுற்ற. அவர்களை  உடனடியாக அருகிலிருந்த வைத்தியசாலைகுக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் குவாடமாலாவின் ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் செய்துக் கொண்டிருக்கிறோம்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். 

இவ்விபத்திற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என குவாடமாலா அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.