(ஆர்.விதுஷா)

அநுராதபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பகுதியில் காங்கேசன் துறையிலிருந்து  கல்கிஸ்ஸ  நோக்கி  சென்ற   புகையிரத்தின்  முன்பாய்ந்து இளைஞரொருவர் தற்கொலை  செய்து  கொண்டுள்ளார்.

நேற்று பிற்பகல்  4.20 மணியளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கு  அமைய  விசாரணைகள்  ஆரம்பிக்ப்பட்டுள்ளன. 

தற்கொலை செய்துகொண்டவர் 24 வயதுடைய நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்.