சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டுவைன் பிராவோ எங்களுக்கு இன்னும் 60 வயது ஆகிவிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சி.எஸ்.கே. அணி அனுபவம் வாய்ந்த பல மூத்த வீரர்களை கொண்டுள்ளதனால் வயதான அணி என்ற விமர்சனத்துக்கும் ஆளாகி வருகிறது. 

இருப்பினும், கடந்த ஐ.பி.எல். தொடரில் அந்த விமர்சனங்களை கடந்து கிண்ணத்தை கைப்பற்றியதுடன். அது மாத்திரமன்றி இம்முறை ஆரம்பமாகியுள்ள 12 ஆவது ஐ.பி.எல் தொடரிலும் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், வயது குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த பிராவோ,

சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 60 வயதாகிவிடவில்லை. எங்களுக்கு 32 இல் இருந்து 35 வயதுதான் ஆகிறது. சந்தேகம் இருந்தால் நீங்கள் கூகுளில் தேடிப் பாருங்கள். நாங்கள் இளம் வீரர்கள்தான். அதிக அனுபவத்தை கொண்டு விளையாடி வருகிறோம்.

எங்களுக்கு ஆட்டத்தில் என்ன பலவீனம் உள்ளது என்பது தெரியும். உலகின் மிகச் சிறந்த தலைவரின் கீழ் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம் என்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் பிராவோ 4 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 33 ஓட்டங்களை கொடுத்து, 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல்.