சிவகார்த்திகேயனுடன் நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்.
‘சீம ராஜா’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்திலும். ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும். ‘இரும்புத்திரை’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் பி. எஸ். மித்திரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்திலும், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பி. எஸ். மித்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ என்ற படத்தில் அவர் முதன்முறையாக ‘ஜனங்களின் கலைஞன்’ விவேக்குடன் இணைந்து நடிக்கிறார்.
சீனியர் நகைச்சுவை நடிகரான விவேக், ‘வெள்ளை பூக்கள்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், ரஜினி, அஜித், விஜய்,சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்திலும் கொமடி நடிகராக நடித்து வருகிறார். அந்த வரிசையில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக இணைந்து ‘ஹீரோ’ படத்தில் நகைச்சுவையாக நடித்துள்ளார் விவேக்.
இதனிடையே ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷனும், இவானாவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM