வீட்டு பாடம் தவறாக எழுதியதற்காக  மாணவன் ஒருவனின் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும்  ஒரு மாணவனின் பெற்றோர் குறித்த பாடசாலையின் ஆசிரியை ரம்யா மீது பொலிஸில் புகார் செய்துள்ளனர். 

 குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் நான்காம் வகுப்பு மாணவன் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதியதற்காக ஆசிரியை ரம்யா மெழுகுவர்த்தியை பற்றவைத்து உருகிய மெழுகை அவன் கையில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார் ரம்யாவை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.