கஞ்சிப்பான இம்ரான் நாடுகடத்தப்பட்டார் !

By Priyatharshan

28 Mar, 2019 | 08:52 AM
image

டுபாயில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரான் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட முஹமட் நஜீம் இம்ரான் என்ற கஞ்சிப்பான இம்ரான் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் நேற்றையதினம் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி இருவரையும் விமான நிலைய சுங்கப் பிரிவினர், தேசிய உளவுத் துறை மையம் ஊடாக விமான நிலைய குற்றப் புலனயவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர். 

இதனையடுத்து, நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரும்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அந்த விசாரணைகள் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை தொடர்ந்ததாகவும், அதனையடுத்து சுமார் 7 மணி நேர விசாரணையின் பின்னர் நதீமால் பெரேரா விடுவிக்கப்பட்டதாகவும் எனினும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார மேலதிக விசாரணைகளுக்காக சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். 

இதேவேளை , கஞ்சிபான இம்ரானுடன் நாடுகடத்தப்பட்ட மேலும் மூன்று பேர் குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34