பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான கொடுப்பனவாக 750 ரூபாவை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டிருந்தது. 

எனினும் இந்த சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து பெருந்தோட்டங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

இதன் காரணமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலையகப்பிரதிநிதிகளின் தலையீட்டினால் 750 ரூபா அடிப்படை சம்பளத்துடன் ஒருவருத்திற்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

அந்த தீர்மானத்திற்கு அமைய 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.