காரொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த காரில் பயணித்த நால்வரில் ஒருவர் பலியான நிலையில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரையோர ரயில் சேவையில் தொடண்டுவ பாலத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 குறித்த கார் விபத்தில் காயமடைந்த நல்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த ரயில் சேவையானது தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.