சீனாவில் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வேறு ஆணுக்கு பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சீனாவின் பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் பெண்ணின் கணவருக்கு ஒரு குழந்தையை பிடிக்கவேயில்லை, அதை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது. இதனால் அவர் இரண்டு குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்த போதும், குழந்தைகளுக்கு மரபணு பரிசோதனை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதன்படி, மரபணு சோதனையில் இரட்டை குழந்தைகளில்,  ஒரு குழந்தை இவருக்கு பிறந்தது என்றும் மற்றொரு குழந்தை இவருக்கு பிறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அப்போது அவரின் மனைவி இல்லை, கணவர் பொய் கூறுகிறார் என்று மறுத்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒரே இரவு மட்டும் கணவருக்கு தெரியாமல் வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கணவர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இரட்டை குழந்தைகள் எப்படி தனித் தனியாக இன்னொரு நபருக்கு பிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இது போன்று குழந்தைகள் பிறக்கும் எனவும் அது 400 ஜோடிகளில் ஒரு ஜோடிக்கோ அல்லது 13,000 ஜோடிகளில் ஒரு ஜோடிக்கோ பிறக்கும் என்று புள்ளி விவரங்கள் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.