விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நாடாத்தியுள்ளதாக பிரதமர் மோடி இன்று மக்கள் மத்தியில் இடம்பெற்ற உரையாடலில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்றுவரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. 

தற்போது இச் சோதனையை இந்தியா 4 வது நாடாக வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச் சோதனையும்,முழுமையாக இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே செய்ததாகவும்,எவ்விதமான சர்வதேச விதிமுறைகளையும் மீறி நடத்தப்படவில்லையெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.