மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது சட்டவிரோதம்

27 Nov, 2015 | 10:12 AM
image

விடு­தலைப் புலிகள் அமைப்பு இலங்­கையில் தடைசெய்­யப்­பட்ட அமைப்­பாகும். எனவே மாவீரர் தினத்தை அனுஷ்­டிப்­பது சட்ட விரோ­த­மா­ன­தாகும் எனத் தெரி­வித்த நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ, வீட்டை மூடிக் கொண்டு ‘பிர­பா­க­ரனின்” புகைப்­ப­டத்தை வைத்து மாவீரர் தினத்தை அனுஷ்­டிப்­பதை கண்டு பிடிப்­பது கஷ்­ட­மாகும் என்றும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தின் குழு அறையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இதனைத் தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் மாவீரர் தினம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பில் நாட்டை பிரிப்­பது தொடர்பில் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. அத்­த­கைய செயற்­பாடு சட்ட விரோ­த­மா­னது தேசத் துரோ­க­மா­னது. இதற்கு இட­ம­ளிக்க மாட்டோம். அத்­தோடு விடு­தலை புலிகள் அமைப்பு இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட அமைப்­பாகும். எனவே மாவீரர் தினத்தை அனுஷ்­டிக்க இட­ம­ளிக்க முடி­யாது.

ஆனால் வீட்டை மூடிக் கொண்டு பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்தை வைத்துக் கொண்டு அனுஷ்­டித்தால் அதனைக் கண்­டு­பி­டிப்­பது கடி­ன­மா­ன­தாகும்.ஆனால் மாவீரர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றதா என்­பது தொடர்பில் பாது­காப்பு அமைச்சு கவ­ன­மாக செயற்­ப­டு­கி­றது.

சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்கள் கடும் போக்­கு­வா­தத்தைக் கடைப்­பி­டித்­தாலும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமாதானமாக வாழவும் தீர்வுக்கும் தயாராவே இருக்கின்றார் என்றும் அமைச்சர் விஜேதாஸ தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44