தெற்காசிய முழுவதும் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் தான் அதிக அளவு சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இது குறித்து சர்க்கரை நோயின் நிபுணர் டொக்டர் விஜய் விஸ்வநாதன் தெரிவித்ததாவது,

“சர்க்கரை நோய்,உலகளவில் உயிர்க்கொல்லி நோயாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் 40 கோடி மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

தெற்காசியாவில் 10 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை பாதிப்பு மற்றும் உயர் குருதி அழுத்த பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள். 

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு உணவு பழக்கம் ஒரு காரணியாக இருந்தாலும்,மனம் மற்றும் உணர்வு சார்ந்த பிரச்சனைகளும் முக்கிய காரணியாக திகழ்கின்றன. 

இந்நிலையில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே சர்க்கரை நோய்க்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வும், புரிதலும் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.