(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணையவுள்ள பரந்துப்பட்ட கூட்டணி  ஆளும் தரப்பினருக்கு பாரிய  சவால்களை ஏற்படுத்தும் என பாராளுமன்ற  உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

திருடர்களுடன் தான் மீண்டும்  கூட்டணியமைத்து  ஊழல்களுக்கு துணைபோகமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவுடன் தெளிவாக குறிப்பிட்டார். இன்றும் இவர் இந்நிலைப்பாட்டில் உறுதியாக  உள்ளார்.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் சுதந்திர கட்சியின் கொள்கைக்கு முரணாக ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.