சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா கடற்பரப்பை அண்டிய பகுதியில் வைத்தே கடற்படையினர் நேற்றைய தினம் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20, 31, 33 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 225 மீற்றர் நீளம் கொண்ட இரு வலைகளையும், 1,291 கிலோ நிறையுடைய மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.