ட்ரோன் கெமரா பயன்படுத்தி சட்டவிரோதமாக  ஹோட்டன் வனப் பகுதியியை ஒளிப்பதிவு செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன பிரஜைகள் மூவருக்கு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரமோத ஜயசேகர, தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து, உத்தரவிட்டுள்ளார்.

ஹோட்டன் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற குறித்த சீன பிரஜைகள் மூவரும், ஹோட்டன் நிர்வாகத்துக்கு அறிவிக்காமல், ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி, ஹோர்ட்டன் வனத்தை ஒளிப்பதிவு செய்த போது, வனாந்தரத்தின் அதிகாரிளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த மூவருக்கும் 25.000 ரூபா தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.