இந்தியா, தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர்  தனது, உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.  இதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து. இவரின் மனைவி அறுவை சிகிச்சைக்கு பின்னர் படுத்த படுகையானதை அடுத்து அவரை மகிழ்விப்பதற்காகவும், காதல் மனைவியின் கஷ்டத்தை போக்குவதற்காகவும் தொலை தூர கட்டுப்பாட்டின் படி இயங்கும் கழிப்பறையுடன் கூடிய படுக்கை உருவாக்கியுள்ளார். (ரிமோட் கண்ட்ரோல் டாய்லெட் பெட்)

இவரின் இந்த கண்டுபிடிப்புக்காக , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து தேசிய விருது மற்றும் ரூ. 2 லட்சம் பரிசு தொகையுடன், முதல் படுக்கையின் தயாரிப்பு செலவான 35,000 ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளார்.

இதுவரை ஒரு படுக்கையை விற்பனை செய்துள்ளார். தற்போது, இந்தியா முழுவதும் இருந்து 350 க்கும் மேற்பட்ட படுக்கை தயாரிப்பதற்கான முன்பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  முத்து தெரிவித்துள்ளார்.