மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் இன்றுவரை 1546 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 10ம் திகதி குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட நடவடிக்கைளை பொலிஸார் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.