பிரான்ஸில் அகழ்வாராச்சியாளர்கள் ரோமானிய பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம்  தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை அகழ்வுப் பணியின் போது மீட்டெடுத்துள்ளனர்.

பிரான்ஸின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

இதன்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து, கூடுதல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேலும் விரிவிபடுத்தப்பட்டன.

இந்த அகழ்வுப் பணியின்போது மொத்தமாக, ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும், பல தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 10 மில்லியன் யூரோவாகும்.