(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி -பிரதமரை இணைத்துக்கொண்டு ஒரு தேசிய பொறிமுறையை அமைத்து  கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே எம்மை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும்  என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு தடவையும் அரசாங்கமாக நாம் ஜெனிவா சென்று அங்கு வாக்குறுதிகளை கொடுத்து, சர்வதேச பிரேரணைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை வந்து அனைத்தையும் மறந்துவிடுகின்றோம். முழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சரியான பொறிமுறையை நாம் உருவாக்கவில்லை என்பதே எமது பலவீனமானக அமைந்துள்ளது. 

நாம் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வருகின்றோம். அடுத்த தடவை மீண்டும் ஜெனிவா சென்றவுடன் நெருக்கடியை சந்திக்க இதுவே காரணமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.