நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் தியசிறகம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று திடிர் என தீபற்றி ஏறிந்த சம்பவம் ஒன்று இன்று இரவு 7மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவையிலிருந்து தலவாகலை பகுதியை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளதாகவும் குறித்த முச்சக்கர வணடியில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாகவும் சாரதிக்கு எவ்வித காய்ங்களும் ஏற்படவில்லை எனவும் முச்சக்கர வண்டியில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரனமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் குறித்த முச்சக்கர வண்டிக்கு முலுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் வைக்கபட்டிருந்த சில ஆவணங்களும் எரிந்து சாம்பளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.