இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக அடுத்த இரண்டு போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. 

இத் தொடருக்கு இலங்கை அணிக்கு வேகப் பந்து வீச்சாளர் மலிங்க தல‍ைமை வகித்தார். இதனால் இவர், சமீபத்தில் மும்பையில் நடந்த டெல்லி அணியுடனான முதல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடவில்லை.

அத்துடன் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி., உலக கோப்பை தொடருக்கு மலிங்க தேர்வாக வேண்டுமானால் எதர்வரும் ‍11 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள உள்ளூர்  போட்டியில் பங்கேற்க வேண்டும் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை அணி வீரர்களுக்கு அறிவத்திருந்தது. இதனால் மலிங்கா, ஐ.பி.எல். தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிறுவனம் எஸ்.எல்.சி.,யிடம் மலிங்கவை ஐ.பி.எல். தொடரில் விளையாட அனுமதி கோரியிருந்தது. இந் நிலையிலேயே மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இலங்கை கிரிக்கெட் நிறுனம் அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி மலிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும், 30 ஆம் திகதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

மலிங்க ஐ.பி.எல். அரங்கில் இதுவரை 110 போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி 154 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.