12 ஆவது ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது.

தோனி தலைமையிலான 11 பேர் கொண்ட சென்னை அணியில் வோட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரய்னா, ‍கேதர் யாதவ், பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், சர்துல் தாகூர் மற்றும் இம்ரான் தாகீர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான 11 பேர் கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, தவான், கொலின் இங்ரம், ரிஷாத் பந்த், கீமோ பவுல், அக்ஸர் படேல், ராகுல் திவாடியா, டிரெண்ட் போல்ட், ரபடா மற்றும் இஷாந் சர்மா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.