40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் பார்வையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கலங்கலான பார்வை அல்லது தெளிவற்ற பார்வை என ஏராளமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.அதில் Pellucid Marginal Degeneration என்ற குறைபாடும் ஒன்று. 

கார்னியாவின் அடிப்பகுதி மென்மையாகவும், நாம் பார்க்கும் பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் செல்லும் முக்கியமான பகுதி ஒழுங்கற்று இருக்கின்ற நிலை தான் Pellucid Marginal Degeneration என்கிறார்கள்.

இதற்கு கண் வைத்தி0ய சிகிச்சை நிபுணர் மற்றும் கன்டெக்ட் லென்ஸ் சிறப்பு நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டால், அவர் இதற்கு தேவையான சிறப்பு கன்டெக்ட் லென்ஸை அணிந்து கொள்ள பரிந்துரைப்பார். 

இத்தகைய பாதிப்பிற்கான முழுமையான நிவாரணம் இத்தகைய கன்டெக்ட் லென்ஸ்கள் தான். சிலருக்கு பார்வைத் திறன் தொடர்பான பிரச்சினைக்காக லேசர் சிகிச்சை மேற்கொண்டிருப்பார்கள். 

அவர்களில் சிலருக்கு, சிகிச்சைக்கு பின்னர்  Residual Refractive Error எனப்படும் பக்கவிளைவு ஏற்படலாம்/ இதனை தொடர்ந்து லேசர் சிகிச்சை மூலம் நிவாரணம் தேடுவதைவிட.சிறப்பு வகையினதான கன்டெக்ட் லென்ஸ் அணிந்து நிவாரணம் மேற்கொள்வதே சிறந்தது.

தொகுப்பு அனுஷா