யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் ; அங்கஜன் சந்தேகம் 

Published By: Digital Desk 4

26 Mar, 2019 | 05:56 PM
image

யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து,அவர்களது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  கிளிநொச்சி மாவட்ட  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது பாரதளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் உயிரச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்  அங்கஜன் இராமநாதன்  “யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்டின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல் தொடர்பில் சிலரது பெயர்களை  அவர்கள் சாடுகின்றனர்

அவர்மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இருப்பின் அவரது மனைவிக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டியதில்லை. நேரடியாக அவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படும். எனவே அது அவர்களின் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.

ஆனாலும் உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான அவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.பொலிஸ் உயர் அதிகாரிகள் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கையும்,சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்ததோடு, எஸ்.டி.எப் பாதுகாப்பு பெறுவதனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத சூழ் நிலை ஏற்படும்” எனவும் அங்கஜன் இராமநாதன்  குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையிலும், பின்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு  பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆர்னோல்ட் மாகாணசபையில் இருந்து, மேயராக யாழ் மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளமயினையும் சுட்டிக்காட்டி மாகாண சபை காலங்களில் பகைமை இன்றி செயற்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19