மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணியை மேற்கொள்வதற்கு அமெரிக்க இராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்ககுள்  குடியேறுவதை தடுக்க ட்ரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன் பிரகாரம்,ரூபா 7 ஆயிரம் கோடி அதாவது (1 பில்லியன் டாலர்) செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான அவசர நிலையை ட்ரம்ப் பிரகடனம் செய்தார். 

அதை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் 92 கிலோமீற்றர் நீளம், 5.5 மீற்றர் உயரத்துக்கு சுவர் கட்டவும், அங்கு வீதி மற்றும் மின் வசதி செய்யும்படி இராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்து இருந்தது.

அதனை பென்டகன் செயல் தலைவர் பாட்ரிக் ‌ஷனாகன் ஏற்றுக் கொண்டார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க இராணுவ துறையின் என்ஜினீயர்களுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி அவர்கள் திட்டம் தயாரிப்பது, அதை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.