(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயற்சிக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல. மாறாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே இதுவாகும் என வியத்மக அமைப்பின் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார்.

மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்ப இவ்வாறு ஒரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரித்து, எழுந்துவரும் மக்கள் குரலை அடக்குவதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

வியத்மக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.