(வத்துகாமம்  நிருபர்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்களில் 99 சத வீதமானோர் இன்னும் தனது பக்கமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கண்டியில் எண்ணெய் தேய்க்கும் வைபவத்தில்  கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட்த்தின் பீடாதிபதிகளை சந்தித்ததோடு, புத்தாண்டு எண்ணெய் தேய்க்கும் வைபவத்திலும்  கலந்துகொண்டார்.  பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ராமஞ்ஞ பீடத்தின் மஹா நாக்க நாப்பான பிரேமசிரி தேரரையும் முன்னாள் ஜனாதிபதி மெனிக்கின்னையில் வைத்து சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும் தெரிவித்தார்.

இம்முறை இடம் பெற உள்ள மே தினம் பற்றி அவரிடம் வினவிய போது ஒருங்கிணைந்;த எதிர்கட்சிகளின் மே தினக் கூட்டத்திற்கு தான் சமூகமளிக்கப்ப போவதாக உறுதி அளித்துள்ளேன். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரின் 99 சத வீதமானோர் இன்னும் என்னுடனே இருக்கின்றனர். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் சக்தி பெற்ற கட்சியும் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுமான என்னுடன் இருக்கும் ஒருங்கிணைந்த எதிரணியின் மே தின கூட்டத்திற்கு சகலரும் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.

ஒருங்கினைந்த எதிரணியினர் எனக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இது வரைக்கும் எவ்வித அழைப்பும் கிடைக்க வில்லை என்றம் அவர் இங்கு தெரிவித்தார்.