காஞ்சிபுரம் ஸ்ரீபெரம்பதூர் பகுதியில் இன்று செவ்வாயக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்ட 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழிந்துள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்டதாலேயே குறித்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையுடன் 2 மகன்களும், அதேநேரம் அவர்களைக் காப்பாற்ற முற்பட்ட மூவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரம்பதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.