(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி தொழிற்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் தற்போது ஏதேனும் அவசர தேவைகள் ஏற்படுமாயின் அதற்கான தற்காலிய சேவைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த வாரம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சில பிரதேசங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மீண்டும் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் இது குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த பிரச்சினைகள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.