(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்தார்.   

வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு  குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  கருத்துக்கு அமைய இடம் பெற்றது. பிரதமரை மையப்படுத்தியே இந்த மோசடி இடம் பெற்றது என்பது   அனைத்து தரப்பினரும் அறிந்த விடயம்.

பிணைமுறி  மோடியாளர்கள் ஆட்சியில் இருக்கும் வரையில் முறையான ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்கப்பெறாது. தலைமைறைவாகியுள்ள  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்   நாட்டுக்கு மீள் அழைத்து வரும் நடவடிக்கைகளை  பிரதமர் ஒருபோதும் துரிதப்படுத்தமாட்டார்.   ஆட்சிமாற்றத்தின் பிறகே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.