கண்டியில்  நடைப்பெற்ற INSEE Cement மற்றும் மத்திய மாகாண சபை ஆகியன இணைந்து ஆரம்பித்த, தனித்துவமான ஒரு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள 175 தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அதனை பூர்த்தி செய்தமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாகாண தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை அமுல்படுத்துவதற்காக மத்திய மாகாண சபை மற்றும் இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE Cement ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒரு முன்னோடி அரச தனியார் பங்குடமையின் உச்சமாக இந்த விருது வழங்கல் வைபவம் அமைந்துள்ளது.

மத்திய மாகாண ஆளுனரான கௌரவ மைத்ரி குணரட்ன அவர்கள் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரான கௌரவ சரத் எக்கநாயக்க அவர்களும் கலந்து கொண்டுள்ளார். மத ;திய மாகாண பிரதம செயலாளரான எம்.எஸ். பிரேமவன்ச, மத்திய மாகாண பொறியியல் சேவைகளுக்கான பிரதி பிரதம செயலாளரான பொறியியலாளர் எச்.டபிள்யூ.எஸ்.ப P. ஜெயவர்த்தன மற்றும் மத்திய மாகாண ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதி பிரதம செயலாளரான டபிள்யூ.எம். விக்கிரமரத்ன, மாவட்ட பொறியியலாளர்கள், பிரதம பொறியியலாளர்கள், INSEE Cement நிறைவேற்று அதிகார சபை அங்கத்தவர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

கண்டியிலுள்ள தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றுக்கு அனுசரணை வழங்குவதற்காக 2018 ஜுன் மாதத்தில் மத்திய மாகாண பிரதம செயலாளர் காரியாலயத்துடன் பங்குடமை ஒன்றை INSEE Cement ஏற்படுத்தியிருந்தது. ஏழு மாத காலம் கொண்ட இப்பயிற்சிநெறியின் கீழ் தனிப்பட்ட வளர்ச்சி மாற்றம், கட்டுமான சட்டம், மின்னியல் பணி, அலுமினியப் பணி, ஊழல் மற்றும் இலஞ்சம், பசுமைக் கட்டட எண்ணக்கரு, சீமெந்து மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் என ஏழு பயிற்சி அலகுகள் அடங்கியுள்ளன. மொத்தமாக 175 தொழில்நுட்ப அதிகாரிகள் இப்பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளனர். தொழிற்துறையைப் பொறுத்தவரையில் இது ஒரு பேண்தகைமை கொண்ட முதலீடு என தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகார சபைகள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு, இதனை வரவேற்றுள்ளமையால் தற்போது தென் மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களிலும் இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

“இந்த முன்னோடி திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதுடன், உள்நாட்டு அதிகார சபைகள் மற்றும் எமது இலக்காக அமைந்த சம்பந்தப்பட்ட குழுக்களிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆதரவு எம்மை மிகவும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது,” என்று INSEE Cement நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்க துறைக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதித்தலைமை அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் கருத்து வெளியிட்டார். “இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களையும் எட்டி, உள்நாட்டு தொழில்நுட்ப அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன் மட்டங்களை மேம்படுத்தி, உள்நாட்டு தொழிற்துறையின் தராதரத்தை பேண்தகைமை மிக்க வழியில் மேம்படுத்தி, தரமுயர்த்துவதற்கான வலுவான அத்திவாரத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.