ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை  கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாற கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அவரை இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் எப்பிரல் மாதம் 9 ஆம் திகத வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்யவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸை கொழும்பில் வைத்து கொலை செய்யவும் மேலும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூரு பரப்பவும் சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார் . 

இந் நிலையில் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்தே இவருக்கான விளக்கமறியில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.