கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத் 28 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளே இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சார்த்திகளும் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.