ரஷ்யாவை சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவர், ஆடை இன்றி நிர்வாணமாக விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.

ரஷ்யாவின் டொமோடிவோ விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

விமான  நிலையத்தில் பயணி ஒருவர் சம்பவம் தொடர்பில் தெரிவித்த போது,

”அவர்  ஆடையின்றி வந்தமைக்கு கராணம் ஆடை உடலின் காற்றியக்கவியலை தடுப்பதால் நிர்வாணமாக இருப்பதாகக் கூச்சலிட்ட படி சுறுசுறுப்பாக விமானத்தில் ஆடையின்றி பறக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார். 

பொலிஸ் விசாரணையில் குறித்த நபர் ரஸ்யாவின் யக்குஸ்தா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மது அருந்தியிருக்கவில்லை எனவும், சுயநினைவுடன் தான் இந்த காரியத்தில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக விமான நிலையங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் சவுதி அரேபியாவில் தாய் ஒருவர் அவசரத்தில் தனது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விமானத்தில் ஏறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.