அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரு பாடலை உருவாக்கவுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்சின் மூன்றாவது கட்டத்தில் கடைசிப் படமாக வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம், ஏப்ரல் 26 ம் திகதி வெளியாகிறது.

சர்வதேச நட்சத்திரமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக உருவாக்கும் பாடல் மூன்று மொழிகளிலும் தயாராகிறது. 

குறித்த பாடல் ஏப்ரல் 1 ம் திகதி இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தில் இந்தப் பாடல் இடம்பெறாது என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் கண்டிப்பாக இது டப்பிங் பதிப்புகளுக்கு கூடுதல் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

எனினும்  முன்பு‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ தமிழ் டப்பிங் வடிவத்துக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியமை குறிப்பிடத்தக்கது.