எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

41 வயதுடைய அடம் கிரிப்த் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். 

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முதல் தர வீரரான 53 வயது டிராய் கூலே எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆஷஸ் தொடர் முடியும் வரை அணியினருடன் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.