நாட்டின் முன்னணி நுகர்வோர் பாவனை பொருட்கள் விற்பனையாளரான சிங்கர்  ஸ்ரீ லங்கா, Dell பங்காளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த விநியோகத்தர் (நுகர்வோர்) மற்றும் பாரிய பிரிவின் சிறந்த விற்பனையாளர் (நுகர்வோர்) விருது ஆகியவற்றை பெற்றுக் கொண்டது. இந்த நிகழ்வுகளுத்துறை, அனந்தரா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், Dell டெக்னொலஜிஸின் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் தெற்காசிய நுகர்வோர் மற்றும் சிறு வியாபாரங்களுக்கான உப தலைவர் அனோதை வெட்டியாகோர்ன், Dell டெக்னொலஜிஸின் செனல் தலைமை அதிகாரி ஃஆசியாவின் வளர்ந்து வரும் சந்தைகளின் தலைமை அதிகாரி சீ வே சூ, மற்றும் Dell டெக்னொலஜிஸின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் கிறிஷான் பெர்னான்டோ ஆகியோர் காணப்படுகின்றனர்.

Dell வியாபாரத்தில் சிங்கர் பதிவு செய்திருந்த சிறந்த பங்களிப்பின் பெறுபேறாக ஆண்டின் சிறந்த விநியோகத்தருக்கான (நுகர்வோர்) விருதை சிங்கர் சுவீகரித்திருந்தது. நுகர்வோர் பிரிவில் உயர் பங்களிப்பு வழங்குநராக சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி திகழ்ந்தது. மேற்படி பிரதான விருதுகளுக்கு மேலதிகமாக, ஆண்டின் சிறந்த நுகர்வோர் விநியோகத்தர் விற்பனை அதிகாரி விருது சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் சரித பெரேரா மற்றும் ஆண்டின் சிறந்த வாடிக்கையாளர் தீர்வுகள் (இரண்டாமிடம்) விற்பனையாளர் விருது கூட்டாண்மை விற்பனை முகாமையாளர் விருது வருண விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு நாம் எமது 5 வருட கால பங்காண்மையை சர்வதேச வர்த்தக நாமமான Dell உடன் கொண்டாடுகிறோம். நாட்டின் நுகர்வோர் வர்த்தக நாமம் எனும் வகையில், இந்த விருதினூடாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய சந்தையில் சிங்கர் ஸ்ரீ லங்காவின் உறுதியான பிரசன்னம் மற்றும் துரித ஊடுறுவல் மற்றும் நாட்டின் இளம் தலைமுறையினருடனான பிணைப்பு போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த உயர் சாதனை தொடர்பில் நாம் பெருமை கொள்வதுடன், இலங்கையின் நுகர்வோருக்கு Dell சலுகைகள் வழங்குவதை மேலும் வலிமைப்படுத்துவதாக அமைந்திருக்கும்.” என்றார்.

சர்வதேச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான Dell உடன் சிங்கரின் உறவு, 2014 ஆம் ஆண்டு முதல் பேணப்படுகின்றது. இந்த குறுகிய காலப்பகுதியில், Dell பிராந்திய மற்றும் உள்நாட்டு நிர்வாகத்தினருடன் இணைந்து பணியாற்றுவதனூடாக இலங்கையில் அதன் சந்தைப் பங்கை அதிகரித்துக் கொள்வதில் பங்களிப்பு வழங்கியிருந்தது.

நுகர்வோருக்கு பரந்தளவு உயர் தரம் வாய்ந்த சர்வதேச வர்த்தக நாமங்களை வழங்குவதில் சிங்கர் ஸ்ரீ லங்கா புகழ்பெற்று காணப்படுகிறது. தனது நுகர்வோருடன் பரந்தளவு விநியோக வலையமைப்பினூடாக தொடர்புகளை பேணி வருவதுடன், இதற்காக தன்வசம் 430 விற்பனை நிலையங்களையும், 2800 விற்பனையாளர்களையும் நாடு முழுவதிலும் கொண்டுள்ளது. மேலும் உறுதியான விற்பனைக்கு பிந்திய சேவை வலையமைப்பையும் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இலங்கையின் முதல் தர மக்களின் மனங்கவர்ந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.