(எம்.எப்.எம்.பஸீர்)
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 எனும் விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி திரும்புகையில் திடீரென ருமேனியாவின் புக்கரஸ்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக நேற்று இவ்வாறு குறித்த விமானம் ருமேனியாவின் புக்கரஸ்ட்டில் தரையிறப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்தது.
குறித்த விமானம் ரூமேனியவில் தரையிறக்கப்பட்டதன் பின்னர், விமான நிலைய வைத்தியர்கள் விமானத்தில் இருந்த சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணிக்கு சிகிச்சையளித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நேற்று மாலை ஆகும் போதும், ருமேனியவைல் தரை இறங்கிய விமானம் அங்கு புக்கரஸ்ட் ஹென்ரி கொன்டா விமான நிலையத்தில் தரித்திருந்தது.
இதனால் விமானத்தில் இருந்த 195 பயனிகளும் ருமேனியாவின் புக்கரஸ்ட் நகர நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விமானம் மீள புறப்பட சமிக்ஞை கிடைக்கும் வரை அதன் சேவையாளர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் அறிக்கை உள்ளிட்டவை கிடைத்த பின்னர் விமானம் மிக விரைவில் விமானம் இலங்கைக்கு திரும்பும் என ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM