மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி சங்கிலியால் கட்டி வைத்து,துன்புறுத்திய கணவர் கைது 

By T Yuwaraj

25 Mar, 2019 | 11:49 PM
image

பாகிஸ்தானில் தன் மனைவிக்க பேய் பிடித்திருக்கிறது எனக் கூறி பல வாரங்களாக சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சாஹிவால் நகரில் வசித்து வரும் பெண் ஒருவரை பேய் பிடித்திருக்கிறது என கூறி அவரது கணவர் உட்பட குடும்பத்தினர் பல வாரங்களாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அண்டை வீட்டுக்காரர்கள் பொலிஸில் அளித்த புகாரையடுத்து குறித்த  பெண் மீட்கப்பட்டார்.  இது குறித்து  தொலைக்காட்சியில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.  அதில், பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அறை ஒன்றின் தரையில் அமர்ந்துள்ளார்.

அவரது கால்கள் சங்கிலியால் சுவருடன் பிணைக்கப்பட்டுள்ளன.  அவரை மீட்டபின் பொலிஸாரிடம், எனது கணவர் மற்றும் உறவினர்கள் என்னை கட்டி வைத்து அடித்து உதைத்து வந்தனர் என அப்பெண் கூறியுள்ளார்.  இதனையடுத்து அவரது கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right