(நா.தினுஷா) 

நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி ஐக்கிய தேசிய கட்சி மக்களின் உரிமைகளை பறித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் வீழ்ச்சியினையே சந்தித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரையில் ஒரு மெகாவோட் மின்சாரத்தைகூட சேகரிப்பதற்கான எவ்வித வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. 

இந்த அரசாங்கம் இயலாமையுடையது. மக்களின் வாழ்வை இருண் டயுகத்துக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது. ஆதலால் மின்வெட்டு நடவடிக்கை அரசாங்கத்துக்கு  ஆருதலாகவே அமையும். ஆனால் கடந்த ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.