வடமராட்சி கிழக்கு மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடாக பளை செல்லு பாதையை பாதுகாப்பான பாதையாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு மாமுனையிலிருந்து பளை செலவதற்க்கு இக் குறுக்கு வீதியால் ஆறு கிலோ மீட்டர் தூரமே உள்ள நிலையில் தற்போது மருதங்கேணி புதுக்காடு ஊடாக பளை செல்வதற்கு 13  km தூரம் அதிக மாக செல்ல வேண்டியுள்ளதாகவும் இயற்கை அனர்த்தம் ஏதாவது ஏற்படும் பட்சத்தில் குறித்த மாமுனை பளை வீதி அவசர வெளியேற்ற பாதையாக பயன்படுத்த முடியுமெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மீன் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தமது பொருட்கள் உரிய காலத்தில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிப்பதுடன் இம் மாமுனை பளை வீதியை சம்மந்தப்பட்டவர்கள் உரிய கவனமெடுத்து சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்