முல்லைத்தீவு - செம்மலை, புளியமுனை கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு  யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்ததில் பல ஏக்கர் விவசாய நிலங்கள்  அழிவடைத்துள்ளதாக பிரதேச மக்கள்  தெரிவித்துள்ளனர் .

மேலும் குறித்த காட்டு யானைகள்  தற்காலிக வீடு ஒன்றினை சேதப்படுத்தியுள்ளதுடன், தென்னை மரங்கள் உள்ளிட்ட விவாசாய வாழ்வாதாரப் பயிர்களையும் அழித்து சேதம் விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

போருக்குப் பின்னர் மிகவும்  நலிவடைந்துள்ள தாம் வாழ்வாதாரமாக விவசாயத்தையே செய்துவருவதாகவும் இவ்வாறு காட்டுயானைகள் அழிவை ஏற்படுத்துவதனால் மிகவும் பின்னடைவுகளை வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர் .

யானை வேலிகளை அமைத்து தமது விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள் ஆவண செய்யவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .