(எம்.எப்.எம்.பஸீர்)

130 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் காலி-அக்குரல பகுதியில் கைதுசெய்யப்பட்ட 09 ஈரான் பிரஜைகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட ட்ரோலர் படகு தொடர்பில் விசாரணை நிறைவடையும் வரை அதனை கொழும்பு துறை முகத்தின் கடற்படையின் ரங்கல இறங்குதுறையில் தடுத்து வைக்கவும் இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.