(ஆர்.விதுஷா)

கடுவலை பாலத்தின் திருத்தப்பணிகளுக்காக கடுவலை -பியகம  வீதி  மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியள்ளது.  

திருத்த பணிகள் நாளை முதல் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

அதனால் நாள்தோறும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு  10 மணிமுதல் அதிகாலை 05 மணி வரை இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக சாரதிகளும் பொது மக்களும் எதிர்கொள்ளும்  அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக மாற்று வழியாக அதிவேக   மேம்பால வீதியை பயன்படுத்தமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.