எம்மில் பலர் சோம்பலான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவதால் அவர்களின் உடல் எடை அதிகரித்து உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். 

உடற்பருமன் என்பது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள உடல் எடையை விட 40 சதவிகிதம் அதிகமாக இருப்பது. இத்தகையவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்த நோய், மூச்சு திணறல், இதய பாதிப்பு போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

உடல் பருமனைக் குறைப்பதற்கு முதலில் வைத்தியர்கள் பல்வேறு வாழ்க்கை நடைமுறை குறித்த பரிந்துரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறார்கள். அதனை பின்பற்றி உடல் எடை குறையாமல், உடற்பருமன் நீடித்தால் அவர்களுக்கு விசேட சத்திரசிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைக்கிறார்கள். தற்போது உடல் எடையை குறைக்க ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி என்ற சத்திரசிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

இதன்போது எம்முடைய இரைப்பையின் அளவை 75 சதவீதம் அளவிற்கு வெட்டி, அகற்றி விடுகிறார்கள், அத்துடன் பசியைத் தூண்டும் கிரிலின் எனப்படும் ஹோர்மோன் சுரப்பியின் சுரத்தல்லையும் கட்டுப்படுத்துகிறார்கள் அல்லது முழுவதுமாக நீக்கிவிடுகிறார்கள். 

இதனால் பசியின் அளவு குறைந்து, சாப்பிடும் அளவும் குறைகிறது. ஆனால் உணவிலிருந்து உட்கிரகிக்கப்படும் சக்தியின் அளவு குறைவதில்லை. இதனால் நோயாளிகள் ஒரே ஆண்டில் அவர்களின் உடல் எடை 70% வரை குறைகிறது. அத்துடன் இத்தகைய சத்திர சிகிச்சை முறை ஒரே ஒரு துளையுடன் மேற்கொள்வதால் ரத்த இழப்பும் குறைவு. வலியும் குறைவு. பலன்கள் நிறைவு என்பதால் இத்தகைய சத்திரசிகிச்சை தற்பொழுது பிரபலமாகி வருகிறது. 

டொக்டர் கோபால்சுவாமி

தொகுப்பு அனுஷா